திருமணமா? எழுது தேர்வு
திருமணத்துக்காக இணையை தேடுவதில் பல வகைகள் உண்டு. அதில் வாலிபர்களும், வாலிபப் பெண்களுக்கும் தனக்கு வரும் இணையிடம் இது இருக்க வேண்டும் அது இருக்க வேண்டும் என விதிக்கும் நிபந்தனைகள் ஒரு புறம். இதில் புதுமையாக ஒரு பெண், என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டுமா, முதலில் தேர்வில் கலந்துகொண்டு விடையளி, பிறகு பார்க்கலாம் என்பதாக அறிவித்திருக்கிறார் தன்னுடைய இணை தேடும் விளம்பரத்தில்.
தனக்கு வரும் இணை அறிவாளியாக இருக்கவேண்டும் என்று கோரும் இந்த பெண், இரட்டை வரி கவிதைகள், பழைய காதலிக்கு எழுதும் விடைபெறும் கடிதம், சிச்சுவான் நிலநடுக்கத்திற்காக அளித்த நன்கொடைத் தொகை எவ்வளவு, இணைய நாவல் ஒன்றை பற்றிய விமர்சனம் என 4 வகை கேள்விகளுக்கு விடையளிக்குமாறு, தன்னை திருமணம் செய்ய விழைந்து விண்ணபிப்போரை கேட்டிருக்கிறார். இதுவரை 500 ஆண்கள் இந்த தேர்வெழுதியதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்களாம்.
1 2 3
|