ஆண்டு 16 ஆனாலும்
மனித இதயத்துக்குள் மனசு எனும் ஒரு மாய உறுப்பை வைத்து, அதில் உணர்வுகளை தைத்து, மக்களை மகிழவும், நெகிழவும், நெளியவும், உருகவும் செய்யக்கூடியது, காதல். ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறிப்போகுமா? பிரிட்டன் நாட்டு ஸ்டீவ் என்பவரும், ஸ்பெயின் நாட்டு கார்மென் ரூயி பெரெஸ் என்பவரும் இந்தப் பாடல் வரிகளுக்கு பொருத்தமான காதலர்கள். 17 ஆண்டுகளுக்கு முன் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இங்கிலாந்துக்கு வந்த அப்போது 25 வயதான கார்மென் ரூயி பெரெஸ், அதே வயதான அந்நாட்டு இளைஞர் ஸ்டீவை சந்தித்தார். காலப்போக்கில் காதல் மலர்ந்து, திருமணம் செய்யவும் முடிவெடுத்தனர். ஆனால் பிரான்ஸ் நாட்டுக்கு பணி தொடர்பாக சென்ற கார்மெனுக்கும் ஸ்டீவுக்குமிடையே தொடர்பு விட்டுப்போனது. இதனிடையில் சில ஆண்டுகள் கழித்து ஸ்டீவ் தன் காதலியின் நினைவில் கடிதமொன்றை எழுதி காதலியின் தாய் வீட்டு முகவரிக்கு அனுப்பினார். அந்த கடிதம் வீட்டின் வெப்பமூட்டும் இடத்தின் மாடத்தில் வைக்கப்பட, அது எதேச்சையாக கீழே இடுக்கில் மாட்டிக்கொள்ள கார்மெனின் கண்களுக்கு படாமலேயே போனது. ஆண்டுகள் உருண்டோடி அண்மையில் கார்மெனுக்கு அந்த கடிதம் எதேச்சையாக கிடைக்க, மனதுக்குள் புதைந்த காதல் மீண்டும் துளிர்விட்டு, தொடர்பு மீண்டும் மலர்ந்து இறுதியில் திருமண விழாவில் முடிந்திருக்கிறது. 1 2 3
|