குளிர்கால ஒலிம்பிக்கில் தொழில்நுட்பங்களின் பெரிய பங்களிப்பு... அற்புதமானது!
2022-04-07 20:04:56


பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக ஒளிபரப்பியதிலும் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுகளை ஆக்கப்பூர்வமாக பரப்பியதிலும் சீன ஊடக குழுமத்தின் முயற்சிக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பாராட்டுக் கடிதம் அனுப்பி நன்றி தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. துவக்க மற்றும் நிறைவு விழாக்களில் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றின் ஒளிபரப்பு இன்னும் உலகளவில் பாராட்டுக்களை பெற்று வருகின்றன. இதில், சீன ஊடகக் குழுமத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ரீதியிலான புதுமைகள், பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளன. தொழில் நுட்பங்களின் பெரிய பங்களிப்பு,  ஒலிம்பிக் வரலாற்றில் எழுதப்படத்தக்கது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நன்றாக ஒளிபரப்பு செய்யும் விதமாக, சீன ஊடக குழுமம், 5ஜி மற்றும் 4கே,  8கே மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, சீன ஊடகக் குழுமம் சொந்தமாக ஆராய்ந்து உருவாக்கிய லியேபாவ் அதிவேக கேமரா, பார்வையாளர்களின் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

 மேலும், மணிக்கு 350 கி.மீ வேகத்தில் ஓடும் அதிவேக தொடர்வண்டியில் 5ஜி நேரடி ஒளிபரப்பு அறையில் அமைக்கப்பட்டது. இத்தகைய நகரக் கூடிய நேரடி ஒளிபரப்பு அறை உலகளவில் முதல்முறையாகக் காணப்பட்டது.