பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து சிறந்த செல்வம்
2023-08-23 15:07:19

உலக நாடுகளைச் சேர்ந்த பாமர்பரிய மருத்துவம், மனித வரலாற்றில் மதிப்புமிகு செல்வமாகும். நோய்களை எதிர்த்து போராடி வரும் கால ஓட்டத்தில் தமிழகத்தில் சித்த மருத்துவத்தைப் போலவே சீன பாரம்பரிய மருத்துவமும் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக,  இவை தலைமுறை தலைமுறையாக நன்றாக பாதுகாக்கப்பட்டு இன்றைய காலத்தில் இன்னும் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகின்றன.

பன்முகத்தன்மை என்பது, மனித நாகரிகங்களின் அடிப்படை உள்ளடக்கம். எனவே, பாரம்பரிய மருத்த்துவத் துறையில் நாகரிகங்கள் மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்தை எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, பிரிக்ஸ் அமைப்புக்குள் சீனா மற்று இந்தியா இடையே இத்தகைய ஒத்துழைப்பை அதிகரிப்பதை எதிர்பார்க்கிறோம். நமது பாரம்பரிய மருத்துவம் எதிர்காலத்தில் உலக அரங்கில் மேலதிக பங்கு ஆற்றும் என்பதையும் எதிர்பார்க்கிறோம்.