சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் சீன அரசவையின் ஒப்புதலுடன் 2024ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 20 மற்றும் 21ஆம் நாட்களில் 3ஆவது சுற்று இரண்டாவது தொகுப்புக்கான மத்திய உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆய்வுக் குழுக்கள், ஷாங்காய், ட்சே ஜியாங், ஜியாங்சி, ஹூபேய், ஹுனான், சோங்சிங், யுன்னான் ஆகிய ஏழு மாநிலங்கள் மற்றும் மாநகரங்களில் மேற்கொண்ட ஆய்வு நிலைமை குறித்த கருத்துகளை வெளியிட்டன.