கரும்பு தவிர சேப்பங்கிழங்குக்கும் புகழ்பெற்ற ஊர்
2023-12-15 14:28:56

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தில் அண்மையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.  குவாங்சியில் எழில்மிக்க இயற்கைக் காட்சியைத் தவிரவும், வெவ்வேறு பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களும் நுகர்வோரிடையே வரவேற்பு பெற்றுள்ளன. ஷிச்சின்பிங் நேரில் சென்று ஆய்வு செய்த குவாங்சியின் லைய்பின் நகரம், பெருமளவிலான கரும்பு சாகுபடி மற்றும் சர்க்கரை உற்பத்திக்குப் புகழ்பெற்றது.

சீனாவின் பல பகுதிகளிலுள்ள கிராமங்கள், உள்ளூர் நடைமுறை நிலைமைக்கு ஏற்ப தனித்துவம் வாய்ந்த விவசாய தொழிலை வளர்த்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பாடுபடுகிறது. இவற்றில் குவாங்சியின் பிங்லேவும் ஒன்றாகும்.

இங்கு விளையும் ஒரு சேப்பங்கிழங்கின் எடை 4 கிலோ. இது சாத்தியமா?இந்த காணொளியில் தேன்மொழியுடன் பிங்லே மாவட்டத்தின் கிராமத்துக்கு சென்று, சேப்பங்கிழங்கு சாகுபடியை பாருங்கள்.