செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்: சீன நாகரிகத்தின் ஒற்றுமை
2023-12-22 08:53:47

மனித குலத்தின் பண்டைகால வரலாற்றில், சீனாவைப் போன்ற பெரிய நாடு நீண்டகால ஒற்றுமையை நிலைநிறுத்தி வருவது மிகவும் அரிதானது. சீன நாகரிகம் தொடர்வது மட்டுமல்லாமல், உயர் நிலையிலான ஒற்றுமையை நிலைநிறுத்தி வருவதற்குக் காரணம் என்ன? சீன செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள் பற்றிய 3வது வீடியோவில், இந்தப் பதிலைத் தேடி பாருங்கள்.  

மனித நாகரிகத்தின் நீண்டகாலப் போக்கில் உலகின் வேறுபட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களால் ஒன்றன்பின் ஒன்றாக சிறந்த நாகரிகம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதகுல வரலாற்றில் சீனாவைப் போன்று நீண்ட காலத்திற்கு ஒற்றுமையைப் பேணிக்காத்து வரும் ஒரு நாட்டினைக் காண்பது அரிது. ஏன் சீனச் நாகரிகம் தொடர்ச்சியாக உயர்ந்த நிலையில் ஒற்றுமையைப் பேணிப்பாதுகாத்து வருகின்றது.

இன்று நான் வெளியீடுகள் மற்றும் பண்பாட்டுக்கான சீனத் தேசிய ஆவணக் காப்பாகத்தின் தலைமையகத்துக்கு வந்திருக்கின்றேன். இந்த இடமானது சான்றாதாரங்களுக்கான மூலங்களின் பொதுவான தரவுத்தளம் மற்றும் சீனப் பண்பாட்டின் மரபணு வங்கி என்னும் புகழுக்கு உரியதாகும். நான் இங்கிருந்து சீன நாகரிகத்தின் கடந்த மற்றும் நிகழ்கால ஒற்றுமையை ஆராயப் போகின்றேன்.

உங்களுக்குத் தெரியுமா நாட்டைக் குறிக்கும் சீன மொழிச் சொல்லான குவோ ஜியா என்பது நாட்டைக் குறிக்கும் குவோ என்னும் சொல்லும் வீட்டைக் குறிக்கும் ஜியா என்னும் சொல்லும் இணைந்ததாகும். எனவே சீனக் கருத்தியலின் படி நாடு என்பது பல்லாயிரக்கணக்கான சிறு குடும்பங்களின் கூட்டமைப்பே ஆகும். நாங்கள் வீட்டையும் நாட்டையும் ஒன்றாகவே கருதுகின்றோம். நாட்டை நிர்வகிக்கும் போக்கில் குடும்பத்தை ஈடுபடுத்துவதன் மூலம் உலகில் அமைதியையும் இணக்கத்தையும் ஏற்படுத்தலாம்.