சீன-நியூசிலாந்து தாராள வர்த்தக உடன்படிக்கைக்கான மேம்பாடு பற்றிய இரு நாட்டு அரசுகளின் உடன்படிக்கை முதற்குறிப்பு
2022-04-07 17:32:14

சீன-நியூசிலாந்து தாராள வர்த்தக உடன்படிக்கைக்கான மேம்பாடு பற்றிய இரு நாட்டு அரசுகளின் உடன்படிக்கை முதற்குறிப்பு ஏப்ரல் 7ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்பட்டது என்று சீன வணிக அமைச்சகம் அன்று அறிவித்தது.

இதன்படி, சரக்கு, சேவை, முதலீடு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் சந்தைகள் மேலும் விரிவுப்படுத்தப்படும். மேலும், மின்னணு வணிகம், போட்டிக் கொள்கை, அரசுக் கொள்வனவு, சுற்றுச்சூழல் மற்றும் வர்த்தகம் ஆகிய 4 அம்சங்கள் இந்த உடன்படிக்கை முதற்குறிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. நவீனப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு இது மேலும் பொருந்தியது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் பயன்தரும் ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்கி, சீன-நியூசிலாந்து பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவின் உள்ளடக்கங்களை அதிகரிப்பதற்கு, இந்தப் புதிய உடன்படிக்கை முதற்குறிப்பு துணைப் புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.