ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது சீன-அமெரிக்க வர்த்தகத்தின் சாராம்சம்
2022-04-14 17:40:58

அமெரிக்க-சீன வர்த்த்க கவுன்சில் அண்மையில் வெளியிட்ட 2022 அமெரிக்க ஏற்றுமதி அறிக்கையில், அமெரிக்காவின் முக்கியமான ஏற்றுமதி இடமாக சீனா தொடர்ந்து திகழ்கிறது. சீனாவுடனான வர்த்தகத்தால் அமெரிக்காவுக்கு பெருவாரியான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

சீன வணிக அமைச்சகம் 14ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் செய்தித் தொடர்பாளர் ஷு யுதிங் இது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது சீன-அமெரிக்க வர்த்தக உறவின் சாராம்சமாகும். இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பை விரிவாக்குவதில் பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது என்பதை உண்மைகள் மீண்டும் நிரூபித்துள்ளன என்று கூறினார். மேலும், உலகில் முதல் 2 பெரிய பொருளாதாரச் சமூகங்களாக, இருநாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவு நிலையாகவும் சீராகவும் வளர்வது இருநாடுகள் மற்றும் இருநாட்டு மக்களின் அடிப்படை நலனுக்குப் பொருந்தியது மட்டுமல்ல, உலகளாவிய தொழில் சங்கிலியின் நிலைத்தன்மைக்கும் உலகப் பொருளாதார மீட்சிக்கும் துணைபுரியும். சீனா மீதான கூடுதல் சுங்க வரி வசூலிப்பையும் சீனத் தொழில் நிறுவனங்களின் மீதான தடைகளையும் அமெரிக்கா கூடிய விரைவில் நீக்கி, ஒத்துழைப்பின் விரிவாக்கத்துக்கு சீரான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.