சீனத் தேசிய தாவரப் பூங்கா துவக்கம்
2022-04-19 10:39:31

சீனத் தேசிய தாவரப் பூங்கா 18ஆம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

பெய்ஜிங்கில் நிறுவப்பட்ட இப்பூங்கா, சீன அறிவியல் கழகத்தின் தாவர ஆய்வகம் மற்றும் பெய்ஜிங் தாவரப் பூங்காவின் அடிப்படையில் விரிவாக்கப்பட்டு அமைக்கப்பட்டது. அதன் மொத்த பரப்பளவு சுமார் 600 ஹெக்டராகும். உலகின் வேறுபட்ட நிலவியல் பகுதிகளிலிருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதித்துவம் வாய்ந்த தாவரங்களையும் அழிவின் விளிம்பிலுள்ள தாவரங்களையும் சேகரிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

தேசிய தாவரப் பூங்கா, தேசிய பூங்காவை மையமாகக் கொண்ட பாதுகாப்பு அமைப்பு முறையுடன் இணைந்து, சீனாவில் தாவரங்களின் பல்வகைமை பாதுகாப்பையும் நிலையான பயன்பாட்டையும் நனவாக்குவதற்குத் துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.