இலங்கையில் 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
2022-04-19 17:08:42

இலங்கையில் 17 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்ற நிலையில், திங்கள்கிழமை, மேலும் 21 புதிய இணை அமைச்சர்கள் அரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றனர். இதையொட்டி, சிறிய அளவிலான பதவியேற்பு விழா அரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, இலங்கையின் முந்தைய அமைச்சரவையில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியதும், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கோரி மக்கள் பல வாரங்களாகப் போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.