போஆவ் ஆசிய மன்றத்தின் 2022 கூட்டம் நிறைவு
2022-04-23 18:50:01

3நாட்கள் நீடித்த போஆவ் ஆசிய மன்றத்தின் 2022ஆம் ஆண்டு கூட்டம் 22ஆம் நாள் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின்  போஆவ் நகரில் நிறைவடைந்தது. 42 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள் நேரிலும், 400 பிரதிநிதிகள் இணையம் வழியாகவும் நடப்புக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொற்றுநோய் மற்றும் உலகம்:உலக வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவது, கூட்டு எதிர்காலத்தை உருவாக்குவது என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும். கோவிட்-19 பரவல் முடிவடைந்த பிறகு உலகப் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் தொடரவல்ல வளர்ச்சி உள்ளிட்ட தலைப்புகள் குறித்து பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் வழியாகப் பிரதிநிதிகள் பொது கருத்துக்களை திரட்டி ஞானத்தைப் பகிர்ந்து கொண்டனர்.