ஆசிரியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய செயல் மிகவும் மோசமானது
2022-04-27 18:23:52

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் கன்ஃபூசியஸ் கழகத்தின் பள்ளி வாகனம் ஒன்றின் மீது ஏப்ரல் 26ஆம் நாள் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 3 சீன ஆசிரியர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். 1 சீன ஆசிரியர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

சீன குடிமக்களை இலக்கு வைத்து முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். பயங்கரவாதிகள், ஆசிரியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதன் இச்செயல் மிகவும் மோசமாகவும் கொடூரமாகவும் இருக்கிறது. இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்ததோடு, சீனா பாகிஸ்தானுடன் இணைந்து இதற்குக் காரணமானவர்களைத் தேடி வருகின்றது என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பிங் 27ஆம் நாள் சுட்டிக்காட்டினார்.