வெற்றிக்கரமாக ஏவப்பட்ட ஜீலின்-1 காவ்ஃபென் செயற்கைக் கோள்கள்
2022-04-30 16:24:54

சீனாவின் ஜீலின்-1 காவ்ஃபென் தொகுதியைச் சேர்ந்த 5 செயற்கைக் கோள்கள் கிழக்கு சீனக்கடலிலிருந்து லாங்மார்ச்-11 ஏவூர்தியின் மூலம் ஏப்ரல் 30ஆம் நாள் முற்பகல் 11.30 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டன. இச்செயற்கைக் கோள்கள் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையை அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நில வள ஆய்வு, நகர வளர்ச்சித் திட்டம், பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்டவற்றுக்கு இச்செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.