நிலக்கரி ஏற்றிச்செல்லும் ரயில்களின் இயக்கத்திற்காக, பயணிகள் ரயில்களை ரத்து செய்த இந்திய ரயில்வே!
2022-05-07 17:29:28

இந்தியாவின் மத்திய ரயில்வே அமைச்சகம் அடுத்த 20 நாட்களில் சுமார் 1,100 பயணிகள் ரயில்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன.

இவற்றில் 500 விரைவு ரயில்களும், 580 பயணிகள் ரயில்களும்  அடங்கும்.

"அனல்மின் நிலையங்களில் ஏற்பட்டிருக்கும் நிலக்கரி தட்டுப்பாட்டின் நிலைமையை சமாளிக்கும் விதமாக,நிலக்கரி ஏற்றிச்செல்லும் ரயில்களின் இயக்கத்தை அதிகரிக்க, இந்தியா முழுவதும்,சுமார் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.