உக்ரைனுக்குப் புதிய சுற்று பாதுகாப்புதவித் திட்டம், அமெரிக்கா அறிவிப்பு!
2022-05-07 15:53:44

உக்ரைனுக்கான புதிய சுற்று பாதுகாப்பு உதவித் திட்டத்தை அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை 6ஆம் நாள் தகவல் வெளியிட்டது. இத்திட்டத்தின்படி, மேலதிக வெடிபொருட்கள், ரேடார் மற்றும் பிற சாதனங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயத்தம் செய்த கிட்டத்தட்ட அனைத்து மூலதனத்தையும் இப்புதிய சுற்று பாதுகாப்புதவி திட்டத்தில்  செலவிட்டுள்ளது என்று பைடன் கூறினார்.

அமெரிக்காவும், உக்ரைனின் பிற சர்வதேச கூட்டாளிகளும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைத் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாகவும் பைடன் தெரிவித்தார்.