ஏப்ரலில் சீனாவின் சிபிஐ மற்றும் பிபிஐ அதிகரிப்பு
2022-05-11 14:46:56

ஏப்ரல் திங்களில் சீனாவின் நுகர்வு விலை குறியீட்டையும் உற்பத்தியாளர் விலை குறியீட்டையும் சீன தேசிய புள்ளிவிவரப் பணியகம் 11ஆம் நாள் வெளியிட்டது.

கோவேட்-19 நோய் தொற்று பாதிப்பு மற்றும் சர்வதேச வணிகப் பொருட்களின் விலை அதிகரிப்பினால், ஏப்ரல் திங்களில் சீனாவின் நுகர்வு விலை குறியீடு மார்ச் மாதத்தை விட 0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.1 விழுக்காடு அதிகம். விவைவாசியை நிலைப்படுத்த, பல்வேறு வாரியங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஏப்ரல் திங்களில் சீனாவின் உற்பத்தியாளர் விலை குறியீடு மார்ச் மாதத்தை விட 0.6 விழுக்காடு அதிகம். அதிகரிப்பின் அளவு மார்ச் திங்களில் இருந்ததை விட 0.5 விழுக்காடு குறைவு என்று தெரிய வந்துள்ளது.