நேட்டோவுக்கு சீனா கடும் கண்டனம்
2022-05-26 19:18:34

நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அண்மையில் சீனாவின் மீது வெளிப்படையாகப் பழி தூற்றியுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மே 26ஆம் நாள் கூறுகையில், நேட்டோவின் தலைமைச் செயலாளர் சீனாவின் மீது பழி தூற்றி, சீனாவின் அரசியல் அமைப்புமுறை குறித்தும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை குறித்தும் பொறுப்பற்ற மற்றும் தவறான கருத்துக்களை தெரிவித்து, சீன அச்சுறுத்தல் கோட்பாட்டைப் பரப்பி வருகிறார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் சீனா ஊன்றி நின்று, தற்காப்புத் தன்மையுடைய தேசிய பாதுகாப்புக் கொள்கையை உறுதியாகப் பின்பற்று வருகிறது. ஐரோப்பாவின் சூழ்நிலையை நேட்டோ குழப்பமாக்கியுள்ளது. ஆசிய மற்றும் உலகச் சூழ்நிலையை குழப்பமாக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.