துருக்கி அரசுத் தலைவர்-பாகிஸ்தான் தலைமை அமைச்சர் சந்திப்பு
2022-06-02 15:22:51

துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன், துருக்கியில் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷார்பஸ் ஷேரிஃபுடன் சந்தித்து பேசினார். அதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

தேசிய பாதுகாப்பு தொழிற்துறையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு எட்டியுள்ள சாதனைகள் குறித்து துருக்கி மகிழ்ச்சியடைந்துள்ளது. சுற்றுலா, கல்வி, சரக்கு போக்குவரத்து, பயணி விமான சேவை, தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் பாடுபடுகின்றன என்று எர்டோகன் தெரிவித்தார்.

செப்டமபர் திங்களில் இஸ்லாமாபாதில் நடைபெறவுள்ள துருக்கி-பாகிஸ்தான் உயர் நிலை பேச்சுவார்த்தைக்கு எர்டோகன் தலைமை தாங்குவதை மகிழ்ச்சியாக அறிவித்தேன். இப்பேச்சுவார்த்தையை எதிர்கார்க்கிறேன் என்று ஷேரிஃப் தெரிவித்தார்.