தோல்வி அடைந்த அமெரிக்க கண்ட உச்சி மாநாடு
2022-06-11 18:17:04

அமெரிக்கா ஏற்பாடு செய்த 9வது அமெரிக்க கண்ட உச்சி மாநாடு ஜுன் 10ஆம் நாள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிறைவு பெற்றது. அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகளின் தலைவர்கள் இவ்வுச்சி மாநாட்டில் பங்கெடுக்கவில்லை. இம்மாநாட்டில் சில நாடுகள் பங்கெடுப்பதை அமெரிக்கா தடுத்தது குறித்து கடந்த சில நாட்களாக, அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் வசைபாடி வருகின்றனர். அமெரிக்கா தனது மேலாதிக்கவாதத்தைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதை இது வெளிப்படுத்தியுள்ளது. நடப்பு உச்சி மாநாடு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.