சீனாவில் பசுமை வளர்ச்சிக்கான சாதனைகள்
2022-06-13 14:44:46

எரியாற்றல் சிக்கனம் மற்றும் மாசு கட்டுப்பாடுடன் கூடிய பசுமையான உற்பத்தி வழிமுறையைச் சீனா ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகிறது. சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி,  நுண்மதி தொழிற்சாலை உள்ளிட்டவற்றின் மூலம், சீனாவில் பசுமைத் தொழிற்சாலைகள் தோன்றியுள்ளன. பசுமை மற்றும் உயர் தரமான வளர்ச்சியுடன், சீனாவிலுள்ள மலைகள் மென்மேலும் பச்சை பசேலென காட்சியளிக்கின்றன. ஆறுகள் மேலும் தெளிந்து காணப்படுகின்றன.  

ஜூன் 13முதல் 19ஆம் நாள் வரை சீனாவின் எரியாற்றல் சிக்கனப்படுத்துவதற்கான பரப்புரை வாரமாகும். குறைந்த கார்பன் வெளியேற்றம் மற்றும் எரியாற்றல் சிக்கனம் என்பது அதன் தலைப்பாகும்.