சீனா மீதான அனைத்து கூடுதல் சுங்க வரிகளையும் நீக்குவது, அனைவருக்கும் நன்மை
2022-07-06 10:38:51

சீனத் துணைத் தலைமையமைச்சர் லியூ ஹெ, அமெரிக்க நிதி அமைச்சர் யெலனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். இந்தத் தொடர்ப்பில் சீன இறக்குமதிப் பொருட்களின் மீதான கூடுதல் சுங்க வரிகளை நீக்குவது பற்றி அமெரிக்காதெரிவித்துள்ளதா? என்ற கேள்விக்குச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லிஜியன் 5ஆம் நாள் கூறுகையில்,

சுங்க வரி விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாடு நிலையாகவும் தெளிவாகவும் உள்ளது. சீனா மீதான அனைத்து கூடுதல் சுங்க வரிகளையும் ரத்து செய்வது, சீனா மற்றும் அமெரிக்காவுக்கும் உலகத்துக்கும் நன்மை பயக்கும் என்றார். அமெரிக்க சிந்தனைக் கிடங்கு நிறுவன மதிப்பீட்டின் படி, சீனா மீதான அனைத்து கூடுதல் சுங்க வரிகளையும் நீக்கினால், அமெரிக்க பணவீக்கத்தை ஒரு சதவீதம் குறைக்கும். தற்போதைய உயர் பணவீக்க சூழ்நிலையில், சீனா மீதான கூடுதல் வரிகள் விரைவில் நீக்கப்பட்டால், நுகர்வோர் மற்றும் வணிகர்கள் கூடிய விரைவில் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.