20 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம்
2022-07-09 16:40:41

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பாலி தீவில் 20 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் 8ஆம் நாள் கலந்து கொண்டார். 20 நாடுகள் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

20 நாடுகள் குழு ஒத்த கருத்துக்களை உருவாக்கவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும், உறுதியற்ற காரணிகள் நிறைந்த உலகத்துக்கு நம்பிக்கையைத் தெரிவிக்கவும் வேண்டும் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. இக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் போர் நிறுத்தம், தொற்றுநோய்க்கு பிந்தைய மீட்பு, தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலிகள், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு முதலியவை பற்றிய விவாதங்களில் கவனம் செலுத்தினர். 20 நாடுகள் குழுவின் முக்கிய பங்காற்றி, பலதரப்புவாதத்தை வலுப்படுத்தி, உலக பிரிவினையைத் தடுக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.