ஃபுஜியன் மாநிலத்தில் லீ கெச்சியாங்கின் ஆய்வுப் பயணம்
2022-07-11 16:31:14

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் ஃபுஜியன் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையின் வழிகாட்டலில், புதிய வளர்ச்சிக் கருத்துக்களைப் பன்முகங்களிலும் செயல்படுத்த வேண்டும். தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டையும் பொருளாதாரச் சமூக வளர்ச்சியையும் பயனுள்ள முறையில் ஒருங்கிணைக்க வேண்டும். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை முன்னேற்றி, சந்தையையும் வேலை வாய்ப்புகளையும் நிதானப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளித்து, பொருளாதாரத்தை நியாயமான வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.