இயன்ற அளவில் இலங்கைக்கு உதவி வழங்குவோம்:சீனா
2022-07-12 17:21:45

இலங்கையின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து இயன்ற அளவில் உதவி அளிக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பிங் தெரிவித்தார்.

12ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறுகையில்,

உணவு தானியங்கள், மருந்துகள் உள்பட அவசர மனிதநேய உதவிகளை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது என்று தெரிவித்தார். மேலும் தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் சேர்ந்து கடன் இன்னலுக்குளாகிய இலங்கைக்கு உதவி அளித்து, அதன் தொடரவல்ல வளர்ச்சிக்காகச் செயலாக்க பங்கு ஆற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.