தோல்வியடைந்த அமெரிக்க அரசு அமைப்பு முறை:கருத்துக் கணிப்பு
2022-07-21 09:58:58

2022ஆம் ஆண்டின் ஜூலை திங்கள் சியானா கல்லூரியுடன் இணைந்து தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய பொது கருத்துக் கணிப்பில், அமெரிக்காவின் அரசு அமைப்பு முறை தோல்வியடைந்து விட்டது என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் அரசியல் அமைப்பு முறை, மிகவும் பிளவுபட்டு, நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று 53% மக்கள் கூறுவதாக தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி கட்டுப்பாடு, கருக்கலைப்பு உரிமைகள் ஆகியவற்றின் மீது அமெரிக்க உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புகள், அமெரிக்கப் பொதுமக்களின் கருத்தைப் புண்படுத்தியுள்ளன என்று ஜார்ஜிய மாநிலத்தின் லில்பர்ன் நகரிலுள்ள 40 வயதான நிர்வாக உதவியாளர் எலிசபெத் தீல் கூறினார்.