இந்திய விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் தீ விபத்து
2022-07-21 16:37:57

கர்நாடக மாநிலத்தின் கார்வார் தளத்துக்கு அருகில் ஐ என் எஸ் விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பலில் 20ஆம் நாளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இப்போது தீ  கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இவ்விமானம் தாங்கி கப்பல் சோதனை பயணம் மேற்கொண்ட போது தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்த வீரர்கள் தீ அணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி, தீயைக் கட்டுப்படுத்தினர் என்று இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.