நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்காக பாகிஸ்தானுக்கு கொள்கைகளின் தொடர்ச்சி தேவை
2022-08-05 17:40:33

பாகிஸ்தானின் திட்டமிடல், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகளுக்கான அமைச்சர் அஹ்சன் இக்பால், நாட்டின் பொருளாதாரம் மீட்பு நிலையில் இருப்பதாக கூறினார். மேலும், நீண்ட கால பொருளாதார இலக்குகளை அடைவதற்காக அரசியல் நிலைத்தன்மை மற்றும் கொள்கையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் வியாழக்கிழமை வலியுறுத்தினார். 

இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி நிறுவனம், ஏற்பாடு செய்த "பாகிஸ்தானுக்கான ஒரு வருட வளர்ச்சி வியூகம்" என்ற அறிக்கையின் வெளியீட்டு விழாவில் அஹ்சன் இக்பால் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

"பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்" என்று அஹ்சன் இக்பால் மேலும் கூறினார்.