கொங் ஃபான்செனின் கதைக்கிணங்க தழுவியமைக்கப்பட்ட திரைப்படம்
2022-08-17 17:27:35

12வது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா அண்மையில் துவங்கியது. “திபெத்துக்கு திரும்பு” என்னும் திரைப்படம் இவ்விழாவைச் சேர்ந்த தியான்டான் வருதுக்காகப் போட்டியிட்டது.

இத்திரைப்படம், கொங் ஃபான்சென் என்பவரின் உண்மையான கதைக்கிணங்க தழுவியமைக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு, திபெத்துக்கு உதவியளித்த பணியாளராக அவர் அங்குள்ள கான்பா மாவட்டத்தின் துணை இயக்குநராக 3 ஆண்டுகளாகப் பதவி வகித்தார். அப்போது, இம்மாவட்டத்திலுள்ள எல்லா கிராமங்கள் மற்றும் மேய்ச்சல் பகுதிகளிலும் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள மக்களுடன் இணைந்து விவசாயப் பணிகளில் ஈடுப்பட்டுள்ளார். 1988ஆம் ஆண்டு அவர் திபெத்துக்குத் திரும்பி, லாசா நகரத்தின் துணைத் தலைவராகப் பதவி ஏற்றார். 1994ஆம் ஆண்டு அவர் சோதனை பயணம் மேற்கொண்ட போது வாகன விபத்தில் மரணமடைந்தார்.

தாய் நாடு மற்றும் மக்களின் மீதான கொங் ஃபான்செனின் அன்பு பீடபூமியிலுள்ள வானத்தைப் போல் தூய்மையாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அவரது கதை மக்களில் பரவல் செய்யப்பட்டு வருகிறது.

1994ஆம் ஆண்டு முதல் இதுவரை, சுமார் 12 ஆயிரம் பணியாளர்கள் திபெத்துக்கு உதவியளிக்க அங்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.