நோர்ட் ஸ்ட்ரீம்-1 இயற்கை எரிவாயு குழாய் விநியோகம் 3 நாட்கள் நிறுத்தம்
2022-08-20 17:09:24

நோர்ட் ஸ்ட்ரீம்-1 குழாய் ஆக்ஸ்ட் 31ஆம் நாள் முதல் 3 நாட்கள் இயற்கை எரிவாயு வழங்குவதை நிறுத்தும் என்று ரஷியாவின் இயற்கை வாயு தொழில் நிறுவனம் 19ஆம் நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

தொடர்புடைய தொழில் நுட்ப ஆவணத்தின்படி, 1 ஆயிரம் மணிக்கு, காற்று அழுத்த பொறி மீது தொழில் நுட்பப் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். அதனால் 3 நாட்களில் பரிசோதனை மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.