இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எச்சரிக்கை
2022-09-09 18:55:51

இந்திய ஒலிம்பிக் கமிட்டியில் மீண்டும் மீண்டும் தோன்றும் நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளைக் காரணம் காட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 8ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திட்டப்படி 2023ஆம் ஆண்டு மே மாதம் மும்பையில் நடைபெறவிருந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முழு அமர்வு ஒத்திவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் பிற்பகுதியில், இப்பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையை நாடும் விதம், தொடர்புடைய பல்வேறு தரப்புகளுடன் லாசன்னே நகரில் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.