அமெரிக்க இணையத் தாக்குதலின் புதிய நுணுக்கங்கள்
2022-09-13 16:48:18

வடமேற்கு பாலிடெக்னிக்கல் பல்கலைக்கழகம் மீதான வெளிநாட்டு இணையத் தாக்குதல் பற்றி சீனாவின் தொடர்புடைய பிரிவு செப்டம்பர் 5ஆம் நாள் தெரிவித்தது. இத்தாக்குதலின் ஊற்றுமூலம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் கீழுள்ள சிறப்பு அணுகல் செயல்பாட்டுப் பணியகமாகும்.

தேசிய கணினி வைரஸ் அவசர சமாளிப்பு மையம் 13ஆம் நாள் வெளியிட்ட புதிய புலனாய்வு அறிக்கையில், அமெரிக்கா நடத்திய இத்தாக்குதலின் தொழில் நுட்ப நுணுக்கங்கள் வெளியிடப்பட்டன. “suctionchar”என்ற இணைய ஆயுதம், தாராளமான தரவுகள் திருடப்பட்ட நேரடி காரணங்களில் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டது.