உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு குறித்து சீனாவின் 3 முன்மொழிவுகள்
2022-09-21 20:24:50

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ நியூயார்கில் நடைபெற்ற உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்புக்கான நண்பர்கள் குழுவின் அமைச்சர் நிலைக் கூட்டத்துக்கு 20ஆம் நாள் தலைமை தாங்கினார். இதில், இந்த முன்னெடுப்பை முன்னேற்றுவதற்குச் சீனத் தரப்பு 3 முன்மொழிவுகளை வழங்கியுள்ளது. முதலாவது, ஒருங்கிணைப்பில் ஊன்றி நின்று ஐ.நா வளர்ச்சி அமைப்பு முறையின் தலைமைப் பங்கை வலுப்படுத்த வேண்டும். இரண்டாவது, விரிவான கலந்தாய்வு, கூட்டு கட்டுமானம் மற்றும் நலன்களின் பகிர்வில் ஊன்றி நின்று குழுவின் ஞானம் மற்றும சக்தியை ஒன்றிணைக்க வேண்டும். மூன்றாவது, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் கூட்டு வளர்ச்சியில் ஊன்றி நின்று, உலக வளர்ச்சிக் கூட்டாளியுறவை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.