வெளிநாட்டு நிதிசாராத் துறைக்கு சீனாவின் நேரடி முதலீடு அதிகரிப்பு
2022-09-23 15:44:42

சீன வணிகத் துறை பணியகம் 22ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டு ஜனவரி முதல் ஆக்ஸ்ட் வரை நிதி சாராத் துறைக்கு சீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகை, 7511 கோடி டாலர் எட்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 5.8 விழுக்காடு அதிகம். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளில் நிதிசாராத் துறைக்கான நேரடி முதலீட்டுத் தொகை 1395 கோடி டாலர் எட்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 8.2 விழுக்காடு அதிகரித்தது.

இவ்வாண்டு முதல் 8 மாதங்களில் சீனாவில் உள்ளபடியே பயன்படுத்தப்பட்ட அந்நிய முதலீட்டுத் தொகை 13ஆயிரத்து 840 கோடி டாலர் எட்டி, 20.2 விழுக்காடு அதிகரித்தது. அதில் சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய முதலீடு 123.7 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.