உலகளவில் அதிக ஈர்ப்பாற்றல் கொண்டிருக்கும் ரென்மின்பி மூலதனம்
2022-09-24 16:27:28

சீன நிதிச் சந்தையின் திறப்புப் பணி முன்னேற்றப்பட்டு வரும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளருக்கு ரென்மின்பி மூலதனம் தொடர்ந்து அதிக ஈர்ப்பாற்றலைக் கொண்டிருக்கிறது என்று சீன மக்கள் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டின் இறுதிவரை, வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்கள், சீனாவில் வைத்திருக்கும் ரென்மின்பி நாணயத்திலான பங்கு பத்திரங்கள், கடன் பத்திரங்கள், வைப்புத் தொகை உள்ளிட்ட நிதி மூலதனத்தின் மொத்த தொகை 10.83 லட்சம் கோடி யுவானை எட்டி, 2020ஆம் ஆண்டை விட 20.5 விழுக்காடு அதிகரித்தது.

2022ஆம் ஆண்டில் ரென்மின்பி நாணயத்தின் சர்வதேச மயமாக்கம் பற்றிய இந்த அறிக்கையின்படி, ரென்மின்பியின் சர்வதேச மயமாக்கத்துக்கான பல்வேறு குறியீடுகள் சீராக உள்ளன. ரென்மின்பியின் எல்லை கடந்த பயன்பாடு நிதானமாக அதிகரித்து வருகிறது. இதனிடையே, எல்லை கடந்த வர்த்தகம், முதலீடு மற்றும் நிதித் திரட்டலில் ரென்மின்பி மூலமான கணக்கு தீர்ப்பு உள்ளிட்ட அடிப்படை அமைப்பு முறையை சீன மக்கள் வங்கி மேம்படுத்தி வருகிறது. எல்லை கடந்த ரென்மின்பி அலுவல்கள் உண்மை பொருளாதாரத்துக்கு சேவைபுரியும் திறன் மேலும் உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.