சீன விவசாயிகளின் அறுவடை விழா கொண்டாட்டங்கள்
2022-09-24 16:22:06

2022ஆம் ஆண்டு சீன விவசாயிகளின் அறுவடை விழாவுக்கான கொண்டாட்டங்கள் சிச்சுவான் மாநிலத்தின் ச்சென்தூ மற்றும் பெய்ஜிங் மாநகரத்தின் ச்சாங்பிங் பகுதியில் செப்டம்பர் 23ஆம் நாள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியான சூழ்நிலையில் கிராமப பகுதிகளின் அழகான காட்சிகளைக் கண்டு இரசித்து, வேளாண் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு, வேளாண் துறை பண்பாடுகளை அறிந்து கொண்டு மகிழ்ந்தனர்.

மேலும், வேளாண் துறையின் அறிவியல் தொழில் நுட்பக் கண்காட்சி, விவசாயிகளின் கலை நிகழ்ச்சி, வேளாண்மை தலைப்பிலான ஓவியக் கண்காட்சி, விவசாயிகளின் சமையல் போட்டி மற்றும் பாடல் போட்டி உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டன.