நியூயார்க்கில் சீன-இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
2022-09-25 16:50:04

 

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது செப்டம்பர் 23ஆம் நாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் முகமது அலி சப்ரியுடன் சந்தித்துரையாடினார்.

வாங் யீ கூறுகையில், இலங்கையுடன் பாரம்பரிய நட்புறவு, நெடுநோக்கு நம்பிக்கை மற்றும் நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. மருந்துகள், அரிசி, எரிபொருள் உள்ளிட்ட மனித நேய உதவிகளை வழங்கியள்ள சீனா, தொடர்ந்து இயன்ற அளவில் இலங்கைக்கு உதவியளிக்கும் என்று தெரிவித்தார்.

சப்ரி கூறுகையில், இலங்கை-சீன நட்புறவுக்கு உறுதியான அடிப்படை உள்ளது. இலங்கை பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஆதரவுகளை இலங்கை மறக்காது என்று தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்ற இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு நம்பிக்கை ஊட்டும் விதம், தாராள வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையை இருதரப்பும் விரைவுபடுத்தும்.