கத்தாரில் ஜெர்மனி தலைமையமைச்சரின் பயணம்
2022-09-26 10:55:57

கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி செப்டம்பர் 25ஆம் நாளிரவு ஜெர்மனி தலைமையமைச்சர் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜேர்மனிக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியை கத்தார் அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

எரிசக்தி துறையில் முதலீட்டு வாய்ப்புகளை இரு நாடுகளின் எரிசக்தி நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன என்று இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தமீம் கூறினார்.

மின்சார உற்பத்தி, விமானப் போக்குவரத்து, புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, கனரக சாதனங்களின் உற்பத்தி முதலிய துறைகளில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்று ஜெர்மனி விரும்புகின்றது என்று ஸ்கோல்ஸ் கூறினார்.