மனித உரிமைகள் கவுன்சிலில் 70 நாடுகளின் சார்பில் பாகிஸ்தான் பிரதிநிதியின் உரை
2022-09-27 17:20:06

ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 51ஆவது கூட்டத் தொடரில் பாகிஸ்தான் பிரதிநிதி செப்டம்பர் 26ஆம் நாள் 70 நாடுகளின் சார்பில் பொது உரை நிகழ்த்தினார். பல்வேறு நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்து, மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை, சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், சின்ஜியாங், ஹாங்காங், திபெத் ஆகியவற்றின் விவகாரங்கள் சீனாவின் உள்விவகாரங்களாகும் என்றும், மனித உரிமை பிரச்சினையை அரசியலாக்குவதையும் இரட்டை வரையறையையும் எதிர்த்து, மனித உரிமையைச் சாக்குப்போக்காகக் கொண்டு சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, 20க்கும் மேற்பட்ட நாடுகள் தனிப்பட்ட உரையில் சீனாவுக்கு ஆதரவளித்துள்ளன. சீனாவின் நியாயமான நிலைப்பாட்டுக்கு சுமார் 100 நாடுகள் வேறுபட்ட முறைகளில் புரிதல் மற்றும் ஆதரவுகளை வெளிப்படுத்தியுள்ளன.