30க்கும் மேலான பிரிக்ஸ் கூட்டங்களையும் நிகழ்வுகளையும் நடத்தும் சீனா
2022-09-29 18:24:38

செப்டம்பரில்,  சுற்றுலா துறை அமைச்சர்கள் கூட்டம், எரியாற்றல் துறை அமைச்சர்கள் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களை பிரிக்ஸ் அமைப்பு நடத்தியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 29ஆம் நாள் நடைபெற்ற செய்திதொடர்பாளர் கூட்டத்தில் கூறுகையில்,

2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை நாடாக சீனா இருக்கின்றது. இவ்வாண்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பல்வேறு துறை ஒத்துழைப்புகளை முன்னேற்றுவதற்கு சீனா முக்கிய பங்காற்றி, சுமார் 130 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

பிரிக்ஸ் பிளாஸ் என்ற ஒத்துழைப்பு அமைப்பு முறை, புதிய சந்தை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் புதிய ஒத்துழைப்பு மேடையை உருவாக்கி, வளரும் நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை முன்னேற்ற உதவும் தற்போது முதல் இவ்வாண்டின் இறுதி வரை 30க்கும் மேலான கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் சீனாவின் ஏற்பாட்டில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.