சீன-இந்திய உறவு பற்றி சீனத் தூதரின் 4 ஆலோசனைகள்
2022-09-29 17:36:31

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 73ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இணையவழி நிகழ்வில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய்டொங் சீன-இந்திய உறவின் வளர்ச்சி குறித்து 4 ஆலோசனைகளை வழங்கினார்.

அவர் செவ்வாய்கிழமை இந்நிகழ்வில் நிகழ்த்திய உரையில், சீன-இந்திய உறவு, இருநாடுகளுக்கு மட்டுமல்லாமல், பிரதேசம் மற்றும் உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாண்டில் புதிய முன்னேற்றம் அடைந்துள்ள இருநாட்டுறவு, நேர்மறை வளர்ச்சிப் போக்கை வெளிக்காட்டியுள்ளது. இதனை இருதரப்பும் நிலைநிறுத்தி, இருநாட்டுறவின் நீண்டகால, சீரான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இருநாட்டுறவின் எதிர்கால வளர்ச்சி பற்றி அவர் கூறுகையில், முதலில் இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று புரிதல் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும். இரண்டாவதாக, கூட்டு வெற்றி பெறக் கூடிய ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும். மூன்றாவதாக, வேறுபாடு மற்றும் சிக்கலான விவகாரங்களை உகந்த முறையில் கையாள வேண்டும். நான்காவதாக, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.