உலக புத்தாக்க தரவரிசையில் சீனா உயர்வு
2022-09-30 09:24:29

2022ஆம் ஆண்டு உலக புத்தாக்க குறியீடு பற்றிய அறிக்கையை ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 29ஆம் நாள் வெளியிட்டுள்ளது. அதன்படி, புத்தாக்க துறைக்கான உலக தரவரிசையில் சீனா கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது. 2022ஆம் ஆண்டு இத்தரவரிசையில் சீனா 11ஆவது இடத்தை வகிக்கிறது. ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா, ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை வகிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில் உலக புத்தாக்க அமைப்பில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று, 10 அறிவுசார் சொத்துரிமை விண்ணப்பங்களில்  7 விண்ணப்பங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். ஆனால் 10ஆண்டுகளுக்கு முன்பு இந்த விகிதம் 5 விண்ணப்பங்களாக மட்டுமே இருந்தது.