வளரும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீட்டுக்கு சீனாவின் எதிர்ப்பு
2022-10-21 18:46:40

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

மனித உரிமை என்ற பெயரில் வளரும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை சீனா உறுதியாக எதிர்க்கின்றது. இது சர்வதேச சமூகம்  குறிப்பாக வளரும் நாடுகளின் ஆதரவையும் பாராட்டையும் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

உலக மனித உரிமை நிர்வாகத்தில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்துள்ளது. சீனா அனைத்து மனித உரிமைகளையும் பெறுவதில் வளர்ச்சியின் பங்கு, மனித உரிமை துறையில் ஒத்துழைப்பையும் கூட்டு வெற்றியையும் முன்னேற்றுவது ஆகிய தலைப்புகளிலான சீனாவின் தீர்மானங்களை ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் 3 முறை அங்கீகரித்துள்ளது. வளர்ச்சியின் மூலம் மனித உரிமையை முன்னேற்றுவது, ஒத்துழைப்பின் மூலம் மனித உரிமையை முன்னேற்றுவது ஆகிய சீனாவின் கருத்துகள் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.