சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு
2022-10-28 10:51:36

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 27ஆம் நாள் ரஷிய வெளியுறவு அமைச்சர் ரால்லோவுடன் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு ரஷிய அரசுத் தலைவர் புத்தின் முதல் நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங்கிற்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். இரு நாடுகளுக்கிடையிலான உயர் நிலை நம்பிக்கையையும் உறுதியான ஆதரவையும் இது வெளிக்காட்டியுள்ளது. சீனா ரஷியாவுடன் இணைந்து பல்வேறு நிலை தொடர்புகளை ஆழமாக்கி, இரு நாட்டுறவையும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளையும் முன்னேற்ற விரும்புகின்றது என்று வாங் யீ கூறினார்.

சீனாவுடனான பல்வேறு நிலைகளிலான தொடர்புகளை வலுப்படுத்தி, பலதரப்பு ஒத்துழைப்பை ஆழமாக்கவும், சீனாவுடன் இணைந்து ஆசிய-பசிபிக் பிரதேச மற்றும் உலக அமைதியைப் பேணிக்காக்கவும் ரஷியா விரும்புகின்றது என்று ராவ்லோவ் தெரிவித்தார்.