ஜி 7 நாடுகளின் அறிக்கைக்கு சீனாவின் எதிர்ப்பு
2022-11-07 19:57:48

தைவான், ஹாங்காங், சின்ஜியாங், திபெத் ஆகியவை தொடர்பான சீனாவின் உள் விவகாரங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை அண்மையில் ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், ஜெர்மனின் முன்ஸ்டெர் நகரில் வெளியிட்டனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாவ் லி ச்சியன் 7ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

ஹாங்காங், சின்ஜியாங், தைவான் உள்ளிட்டவை தொடர்பான பிரச்சினைகளில் சீனாவின் நிலைப்பாடு நிலையாகவும் தெளிவாகவும் உள்ளது. இவ்வறிக்கை சீனாவின் கருத்துகளையும் உண்மைகளையும் கருத்தில் கொள்ளாமல், சீனாவின் உள் விவகாரங்களில் தலையீடு செய்துள்ளது. இது குறித்து சீனா கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றது என்றார்.