திறப்பு கொண்ட எரியாற்றல் வளர்ச்சிப் பாதையில் சீனா
2022-11-08 16:04:01

11வது சீனச் சர்வதேச எண்ணெய் வர்த்தக மாநாடு நவம்பர் 8ஆம் நாள் நடைபெற்றது. சீன வணிகத் துறைத் துணை அமைச்சர் ஷெங் ச்சியூபிங் இம்மாநாட்டில் கூறுகையில், உயர் நிலை திறப்புப் பணியில் ஊன்றி நின்று, சீனாவின் புதிய வளர்ச்சியின் மூலம் உலகத்துக்குப் புதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. திறப்பு கொண்ட எரியாற்றல் வளர்ச்சிப் பாதையில் சீனா தொடர்ந்து ஊன்றி நின்று வருகிறது. சீன எரியாற்றல் சந்தையின் சீரான வளர்ச்சி, உலகின் எரியாற்றல் உற்பத்தி நாடுகள், நுகர்வு நாடுகள் மற்றும் வர்த்தக நாடுகளுக்குத் துணைப் புரிவது மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளுக்கு மேலதிக நல்ல வாய்ப்புகளை வழங்கும் என்றார்.