ரஷியாவின் எண்ணெயை தொடர்ந்து வாங்குகிறது இந்தியா
2022-11-09 14:00:55

ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 8ஆம் நாள் செவ்வாய்கிழமை மாஸ்கோவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷிய  மற்றும்  உக்ரைன் இடையேயான மோதலுக்கும் பிறகு இந்திய அரசின் உயர்நிலை அதிகாரி முதன்முறையாக ரஷியாவில் பயணம் மேற்கொண்டார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜெய்சங்கர் கூறுகையில்

இந்தியா ரஷியாவிம்ட இருந்து எண்ணெயைத் தொடர்ந்து வாங்கி வருகிறது.  இரு நாடுகளும் வர்த்தக உறவை விரிவாக்கி வருகின்றன என்று தெரிவித்தார்.

அக்டோபரில் நாள்தோறும் ரஷியா சுமார் 9லட்சத்து 46ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 22 விழுக்காடு வகித்தது என்று ரஷிய செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நொவஸ்டி செய்தி வெளியிட்டது.

தற்போது, சௌதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளைத் தாண்டி, ரஷியா, இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் விநியோக நாடாக திகழ்கிறது குறிப்பிடத்தக்கது.