அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.77 விழுக்காடாக குறைவு
2022-11-15 11:05:26

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 6.77 விழுக்காடாக குறைந்துள்ளதாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்  திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான பணவீக்கம் 6.77 விழுக்காடாக இருந்துள்ளது என்று இவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது 7.41 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 8.60 விழுக்காடாக இருந்து அக்டோபர் மாதத்தில் 7.01 விழுக்காடாக குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தன.  

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சில்லறை பணவீக்கம் 4.48 விழுக்காடாகவும், உணவுப் பணவீக்கம் 0.85 விழுக்காடாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.