அமெரிக்க அரசு தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டி:டிரம்ப்
2022-11-16 16:13:37

அரசு தலைவர் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவதாகவும், அதே நாள் அமெரிக்க கூட்டாட்சி தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வ ஆவணங்களை ஒப்படைத்ததாகவும் முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் 15ஆம் நாளிரவு அறிவித்தார்.

டிரம்பிற்கு 76 வயது. 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை அமெரிக்க அரசுத் தலைவராக அவர் பதவி வகித்தார். 2020ஆம் ஆண்டில் அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சித் தலைவர் பைடன் அமெரிக்க அரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.

தற்போது, அவர் மீதான பல குற்றவியல் மற்றும் சிவில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.