ஈரான் மீதான நிர்ப்பந்தம் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் துணைபுரியாது:சீனப் பிரதிநிதி
2022-11-18 11:30:15

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயற்குழுக் கூட்டத்தில், பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூண்டுதலில், ஈரானின் பாதுகாப்பு விவகாரம் குறித்த தீர்மானம் ஒன்று 17ஆம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்துக்கு எதிராக சீனா வாக்களித்தது.

இது பற்றி சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக்கூறிய சீனப் பிரதிநிதி வாங் ட்சாங், ஈரான் மீது நிர்ப்பந்தத்தைத் திணிப்பது அதன் அணு ஆற்றல் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் துணைபுரியாமல், எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் ஈரானுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட தரப்புகள் நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் ஆதரவளித்து, பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேற்றுமையைக் குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.